நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் 80ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்; நாடு முழுவதும் 152 தொகுதிகளில் நடைபெற்றன: டத்தோ முருகையா

சிரம்பான்:

மஇகா தனது 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு தழுவிய நிலையில் விளையாட்டு போட்டிகளை இன்று வெற்றிகரமாக நடத்தியது.

நாட்டின் 152 மஇகா தொகுதிகளும் இதில் பங்கேற்று பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தன.

இந்த விளையாட்டு திருவிழாவில் கால்பந்து, கேரம், பூப்பந்து, கைப்பந்து, கூடை பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சமூக அடிப்படையிலான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

சமூக ஒற்றுமை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் மத்தியில் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



சிரம்பான் மஇகா தொகுதி ஏற்பாடு செய்த கால்பந்து போட்டி, போர்ட்டிக்சன் வணிக வளாகத்தில் ராசா சிரம்பான் மஇகா தொகுதி ஏற்பாடு செய்த கேரம் போட்டியை மஇகா உதவித் தலைவரும் விழா குழுத் தலைவருமான டத்தோ டி. முருகையா தொடக்கி வைத்தா.

இவ்விழாவிழல் உரையாற்றிய டத்தோ டி. முருகையா, விளையாட்டு விழா என்பது வெறும் விளையாட்டு நிகழ்வு மட்டுமல்ல.

மஇகா உறுப்பினர்கள், சமூகத்தினரிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் தளமாகவும் அமைகிறது.

கடந்த 80 ஆண்டுகளாக மஇகா மக்களுக்குச் சேவை செய்து இந்திய சமூகத்தின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது.

இவ்விளையாட்டு திருவிழா, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கும், இளைஞர்களிடையே ஒழுக்கத்தை வளர்ப்பதற்கும், வயது, தொழில், பின்னணி என்ற வேறுபாடுகளைத் தாண்டி ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குமான கட்சியின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

மேலும், மஇகாவின் 80ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 152 தொகுதிகளும் உற்சாகமாக பங்கேற்று நிகழ்ச்சிகளை நடத்தி வருவதை டத்தோ முருகையா பாராட்டினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset