செய்திகள் மலேசியா
மலேசியா–துர்க்மெனிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம்: எரிசக்தி, வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்த வரலாற்று ஒப்பந்தம்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துர்க்மெனிஸ்தான் உத்தியோகபூர்வ பயணத்தைத் தொடர்ந்து, மலேசியாவும் துர்க்மெனிஸ்தானும் எரிசக்தி, பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன. அதோடு, வர்த்தகம், முதலீடு, போக்குவரத்து, கல்வி, தொழில்நுட்பத் துறைகளிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்க இருநாடுகளும் உறுதியேற்றுள்ளன.
பயணத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பரஸ்பர பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், புதிய ஒத்துழைப்பு துறைகளை ஆராயவும் இருநாடுகளும் இணக்கம் தெரிவித்தன.
இந்தச் சந்திப்பில் எண்ணெய், இயற்கை எரிவாயுத் துறை முக்கிய கவனம் பெற்றது. கடந்த 30 ஆண்டுகளாக துர்க்மெனிஸ்தானில் செயல்பட்டு வரும் பெட்ரோனாஸ் நிறுவனத்தின் பங்களிப்பை இருநாட்டு தலைவர்களும் பாராட்டினர். மேலும், துர்க்மெனிஸ்தானின் எரிசக்தி வளங்களை மேம்படுத்தும் நோக்கில், பெட்ரோனாஸ், அந்நாட்டு அரசுடைமை எரிசக்தி நிறுவனங்களுக்கு இடையிலான பல முக்கிய ஒப்பந்தங்களும் வரவேற்கப்பட்டன.
அத்துடன், விமான சேவை ஒப்பந்தம், இராஜதந்திரப் பயிற்சி, அறிவியல் பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், போக்குவரத்து ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
அறிவியல், தொழில்நுட்பம், புதுமை, சுற்றுலா, கலாசாரம், விளையாட்டு, உயர்கல்வி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இருநாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. குறிப்பாக, யுனிவர்சிட்டி தெனாகா நேஷனல் (UNITEN), துர்க்மெனிஸ்தானின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான கல்வி ஒத்துழைப்புகள் மேலும் வலுப்படுத்தப்படவுள்ளன.
பிராந்திய, சர்வதேச விவகாரங்களில், நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இருநாடுகளும் உறுதி தெரிவித்தன.
ஜூன் 18 முதல் 19 வரை நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ பயணம், 2022-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட முதல் துர்க்மெனிஸ்தான் பயணமாகும்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 20, 2026, 1:18 pm
சுகாதாரக் கொள்கையில் பெரும் மாற்றம் அவசியம்: அஹ்மத் ஜாஹித்
June 20, 2026, 10:23 am
பெர்ச்சாமை புரட்டிப்போட்ட புயல்: 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
June 19, 2026, 6:00 pm
நீதித்துறையின் உயிர்நாடி மக்களின் நம்பிக்கை: தலைமை நீதிபதியின் ஆழமான எச்சரிக்கை
June 19, 2026, 5:28 pm
