நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ் தலைமையகத்தில் நடைபெறும் முக்கிய கூட்டத்தில் டத்தோஸ்ரீ ஹம்ஸா கலந்துக் கொண்டார்

கோலாலம்பூர்:

வவாசான் நெகாரா கட்சியின் நிறுவனர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிற்காக இன்று இரவு பாஸ் தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

பாஸ் உதவித் தலைவரும், தேசியக் கூட்டணி தலைவருமான அஹ்மத் சம்சுரி மொக்தார், பாஸ் தேர்தல் தலைமை இயக்குநர் சனுசி நோர் ஆகியோரும் உடன் காணப்பட்டனர்.

முன்னதாக பாஸ், பெர்சத்து கட்சிகளுக்கு இடையே நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில், பாஸ் தலைமையகத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெறுகிறது.

பாஸ் மத்தியக் குழு உறுப்பினர் கைரில் நிஜாம் கிருதினைச் சந்தித்தபோது, இந்தக் கூட்டத்தில் அனைத்து விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படும் என்று கூறினார்.

அதே நேரத்தில் தகவல் தலைவர் அஹ்மத் பத்லி ஷாரி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset