நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபகற்ப மலேசியாவில் டீசலின் விலை 30 சென் குறைகிறது

புத்ராஜெயா:

தீபகற்ப மலேசியாவில் நாளை முதல் டீசல் விலை 30 சென் குறையும் என நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை தற்போதுள்ள ஒரு லிட்டர் 4.67 ரிங்கிட்டிலிருந்து 4.37 ரிங்கிட்டாகக் குறையும்.

அதே நேரத்தில் சபா, சரவா, லாபுவானில் டீசல் ஒரு லிட்டர் 2.15 ரிங்கிட் என்ற மானிய விலையில் தொடர்ந்து விற்கப்படும்.

ரோன்97இன் விலை ஒரு லிட்டர் 4.35 ரிங்கிட்டாகவே இருக்கும்.

அதேசமயம் மானியம் இல்லாத ரோன் 95 ஒரு லிட்டர் 3.72 ரிங்கிட் என்ற விலையில் தொடர்ந்து விற்கப்படும்.

பூடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற விலையிலேயே நீடிக்கிறது.

மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 2.05 ரிங்கிட் என்ற விலையிலும்,

மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் டீசல் ஒரு லிட்டருக்கு 2.15 ரிங்கிட் என்ற விலையிலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது என்று நிதியமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset