நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹைலண்ட்ஸ் தோட்ட தமிழ்ப்பள்ளியின் கார் நிறுத்துமிட பிரச்சினைக்கு தீர்வு காண்பதே எனது நோக்கம்; தமிழ்ப்பள்ளி விவகாரத்தை டிக் டாக்கில் பேச வேண்டாம்: குணராஜ்

கிள்ளான்:

ஹைலண்ட்ஸ் தோட்ட தமிழ்ப்பள்ளியின் கார் நிறுத்துமிட பிரச்சினைக்கு தீர்வு காண்பதே எனது முதன்மை நோக்கமாகும்.

ஆக தமிழ்ப்பள்ளி விவகாரத்தை யாரும் டிக் டாக்கில் பேச வேண்டாம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் கூறினார்.

ஹைலண்ட்ஸ் தோட்ட தமிழ்ப்பள்ளியில் 1,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

காலையிலும் மாலையிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது இவ்விடத்தில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த போக்குவரத்து நெரிசல் சுற்றுவட்டார மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் தான் பள்ளிக்கு முன் இருக்கும் நிலத்தில் கார் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்க பள்ளி நிர்வாகம் முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் தான் அந்நிலத்தில் விவசாயம் செய்வதற்கு ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர்.

பள்ளி நிர்வாகம் அதை தடுத்து நிறுத்த அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஆனால மிரட்டல் கொடுக்கிறார்கள் என சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இது முற்றிலும் பொய்யான தகவலாகும்.

அதே வேளையில் தமிழ்ப்பள்ளி விவகாரத்தை யாரும் சமூக ஊடகங்களில் பேச வேண்டாம்.

நேரடியாக வந்தாலே அமைதியான முறையில் பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம்.
ஹைலண்ட்ஸ் தோட்ட தமிழ்ப்பள்ளியின் கார் நிறுத்துமிட பிரச்சினைக்கு தான் தீர்வு காண வேண்டும். இது தான் முக்கியம்.

அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset