செய்திகள் மலேசியா
பஞ்சாப் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்: டத்தோ குமார்
கோலாலம்பூர்:
பஞ்சாப் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
புகிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ.எம். குமார் இதனை கூறினார்.
கடந்த ஏப்ரல் 27 அன்று பஞ்சாபின் பாட்டியாலாவில் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும், இந்திய அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்களை போலிஸ் கைது செய்து நாடு கடத்தியுள்ளது.
அந்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
அந்த இரண்டு சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய இந்திய அதிகாரிகள் உதவி கோரியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த ஒத்துழைப்பு, சர்வதேச அளவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புகளை வலுப்படுத்தும்.
அதே வேளையில், எல்லை தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் போலிசாரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
முன்னதாக ஏப்ரல் மாதம் முதல் கோலாலம்பூரில் பதுங்கியிருந்த சந்தேக நபர், புக்கிட் அமான் போலிசார் கைது செய்யப்பட்டதாக ஜூன் 9 அன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 17, 2026, 9:48 pm
பாஸ் தலைமையகத்தில் நடைபெறும் முக்கிய கூட்டத்தில் டத்தோஸ்ரீ ஹம்ஸா கலந்துக் கொண்டார்
June 17, 2026, 9:46 pm
தீபகற்ப மலேசியாவில் டீசலின் விலை 30 சென் குறைகிறது
June 17, 2026, 9:43 pm
சிகாமாட் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுடன் சந்திப்பு: கல்வி முன்னேற்றத்திற்கு யுனேஸ்வரன் உறுதி
June 17, 2026, 6:40 pm
திருடப்பட்ட படகை மீட்க உதவிய இரு மலேசியர்களுக்கு சிங்கப்பூரின் உயரிய பாராட்டு
June 17, 2026, 6:25 pm
குரூன் முகாம் வெடிப்பு சம்பவம்: கையெறி குண்டு பயிற்சிகள் நிறுத்தப்படுகிறது
June 17, 2026, 1:36 pm
