செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலானில் பெர்சத்து, தேசியக் கூட்டணி அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
நெகிரி செம்பிலானில் பெர்சத்து, தேசியக் கூட்டணி அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்.
நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ வீ. சரவணக்குமார் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜொகூர் மாநில தேர்தலை தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பெர்சத்து, பாஸ் கட்சிகளுக்கு இடையிலான அரசியல் நட்பு துண்டிக்கப்பட்டது.
இருந்தாலும் பெர்சத்து கட்சி தொடர்ந்து தேசியக் கூட்டணியில் நீடிக்கும். இரு மாநில தேர்தல்களை எதிர்கொள்ள பெர்சத்து தயார் என்று கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் கூறினார்.
இதன் அடிப்படையில் ஜொகூரை தொடர்ந்து நெகிரி செம்பிலானிலும் பெர்சத்து மிகப் பெரிய வெற்றியை பெறும்.
குறிப்பாக அதிகமான தொகுதிகளை பெர்சத்து கைப்பற்றும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 17, 2026, 9:48 pm
பாஸ் தலைமையகத்தில் நடைபெறும் முக்கிய கூட்டத்தில் டத்தோஸ்ரீ ஹம்ஸா கலந்துக் கொண்டார்
June 17, 2026, 9:46 pm
தீபகற்ப மலேசியாவில் டீசலின் விலை 30 சென் குறைகிறது
June 17, 2026, 9:43 pm
சிகாமாட் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுடன் சந்திப்பு: கல்வி முன்னேற்றத்திற்கு யுனேஸ்வரன் உறுதி
June 17, 2026, 6:40 pm
திருடப்பட்ட படகை மீட்க உதவிய இரு மலேசியர்களுக்கு சிங்கப்பூரின் உயரிய பாராட்டு
June 17, 2026, 6:25 pm
குரூன் முகாம் வெடிப்பு சம்பவம்: கையெறி குண்டு பயிற்சிகள் நிறுத்தப்படுகிறது
June 17, 2026, 1:36 pm
