நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் தேர்தலில் நான் போட்டியிடுவதா இல்லையா என்பதை மஇகா தலைமை முடிவு செய்யும்: ரவீன்குமார்

ஜொகூர்பாரு:

வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் நான் போட்டியிடுவதா இல்லையா என்பதை மஇகா தலைமை முடிவு செய்யும்.

தெங்காரோ சட்டமன்ற உறுப்பினர் கே. ரவீன்குமார் இதனை கூறினார்.

வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் நான் தொகுதி மாறுவேனா அல்லது போட்டியிலிருந்து விலகுவேனா என்ற யூகங்கள் தொடர்ந்து வலுத்து வருகிறது.

குறிப்பாக தெங்காரோ, பெர்லிங் தொகுதிகளை மஇகாவும் அம்னோவும் பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்விவகாரத்தில் எனது தலைவிதியை மஇகா தலைமையிடம் ஒப்படைத்து விட்டேன்.

மேலும் தற்போதைக்கு கட்சியின் வெற்றிக்காக எனது கடமைகளை ஆற்றி வருகிறேன்.

நான் போட்டியிடுவதா இல்லையா என்பதை தலைமைதான் முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset