நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நிய நாட்டினர் வியாபாரம் செய்ய அனுமதி கொடுப்பது ஏன்?: மிண்டாஸ் தலைவர் இராஜசேகரன் கேள்வி

கோலாலம்பூர்:

மலேசியாவில் அந்நிய நாட்டினர் அங்கங்கே கடைகள் திறக்க  ஏன் அனுமதி வழங்கப்படுகிறது.

மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். இராஜசேகரன் இக்கேள்வியை எழுப்பினார்.

இப்போது எங்கு பார்த்தாலும் அந்நிய நாட்டினர் கடைகளை திறந்த வண்ணம் உள்ளனர்.

வங்காளதேசிகள் உட்பட பல அந்நிய நாட்டினர் மளிகை கடைகள், முடி கடைகள், காய்கறி கடைகள் உட்பட பல கடைகளை திறந்துள்ளனர்.

இது மலேசியர்கள்களுக்கு பெரும் மிரட்டலாக உருவெடுத்து வருகிறது.

அந்நிய நாட்டினர் கடைகளை திறக்க ஏன் அனுமதி கொடுக்க வேண்டும் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

எங்கு பார்த்தாலும் அந்நிய நாட்டவர்களின் கடைகள் அதிகமாக உள்ளது.

தொழிலுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் கடைகளை திறந்து தொழிலை கெடுத்து வருகின்றனர்.

இதற்கு அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

குறிப்பாக கோலாலம்பூரில் இதுபோன்ற கடைகளுக்கு எதிராக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset