செய்திகள் மலேசியா
“திட்ட அறிவிப்புகள் அல்ல, மக்களின் வாழ்க்கையை மாற்றும் செயல்களே உண்மையான தலைவரை நிரூபிக்கும்”: ஒன் ஹாஃபிஸ் சூசக உரை
கூலாய்:
“மக்கள் யார் அதிக திட்டங்களை அறிவிக்கிறார்கள் என்பதைப் பார்க்கவில்லை; யார் உண்மையில் மக்களுக்குப் பலன் சேர்க்கிறார்கள் என்பதையே மதிப்பிடுகிறார்கள்” என ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹாஃபிஸ் காசி தெரிவித்தார்.
கூலாய் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தெற்கு ஷட்டில் ரயில் சேவை (Southern Shuttle Service) தொடக்க விழாவில், போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் முன்னிலையில் உரையாற்றிய ஒன் ஹாஃபிஸ், தலைமைத்துவத்தின் உண்மையான அளவுகோல் மக்களின் நலனுக்காக செய்யப்படும் பணிகளே என வலியுறுத்தினார்.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஒன் ஹாஃபிஸுக்கும் அந்தோனி லோக்கிற்கும் இடையே கருத்து மோதல்கள் இடம்பெற்ற நிலையில், இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
“ஒரு தலைவரின் பதவி சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு ஒன்றே, மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவது. பல விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இறுதியில் மக்கள் எதிர்பார்ப்பது முடிவுகள்தான்,” என்று அவர் கூறினார்.
அதேவேளை, “அமைச்சருடன் ஒப்பிடும்போது நான் அதிகாரத்திலும் நிதி ஒதுக்கீட்டிலும் சிறியவராக இருக்கலாம்; ஆனால் மக்களுக்கான சேவையில் அர்ப்பணிப்பே முக்கியம்,” எனக் குறிப்பிட்டு மறைமுகமான அரசியல் செய்தியையும் பதிவு செய்தார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என உறுதியளித்தார்.
“நாங்கள் தேர்தல் காலத்தை எதிர்கொண்டாலும், மக்களுக்கான சேவைகள் ஒருபோதும் நிறுத்தப்படக் கூடாது. அரசியல் ஒரு பக்கம்; மக்கள் நலன் மறுபக்கம். அரசின் பணிகள் வழக்கம்போல முன்னெடுக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஊடகங்கள் தங்களின் சந்திப்பில் அரசியல் ‘நாடகம்’ நடைபெறும் என எதிர்பார்த்திருக்கலாம் என நகைச்சுவையாகக் கூறிய அவர், “நான் இன்று போக்குவரத்து அமைச்சராகவும், ஒன் ஹாஃபிஸ் ஜொகூர் மந்திரி பெசாராகவும் இங்கு வந்துள்ளோம். எங்களின் முன்னுரிமை மக்கள் நலன்தான்,” என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 5:07 pm
அந்நிய நாட்டினர் வியாபாரம் செய்ய அனுமதி கொடுப்பது ஏன்?: மிண்டாஸ் தலைவர் இராஜசேகரன் கேள்வி
June 16, 2026, 4:30 pm
தீர்ப்பாய உத்தரவை மீறுபவர்களுக்கு அமலுக்கு வரும் புதிய சட்ட நடவடிக்கை: நூருல் ஹுஸ்னா அவாங்
June 16, 2026, 4:02 pm
