செய்திகள் மலேசியா
ஹோபார்ட் முகாமில் பயிற்சியின் போது குண்டு வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் மரணம்
குரூண்:
ஹோபார்ட் முகாம் சுடும் பயிற்சித் தளத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு ராணுவ வீரர்கள் குண்டுவெடிப்பில் உயிரிழந்தனர்.
இங்குள்ள சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் அவர்கள் மரணமடைந்தனர்.
கடுமையான காயங்களுக்கு இலக்கான அந்த ஆண், பெண் வீரர்கள் உயிரிழந்ததாகத் தெரிய வருகிறது.
கோலா மூடா மாவட்ட போலிஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
மேலும் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு இச்சம்பவம் குறித்த முதல் தகவல் கிடைத்தாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 5:07 pm
அந்நிய நாட்டினர் வியாபாரம் செய்ய அனுமதி கொடுப்பது ஏன்?: மிண்டாஸ் தலைவர் இராஜசேகரன் கேள்வி
June 16, 2026, 4:30 pm
