நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சிகை அலங்கரிப்பு நிலையங்கள் எதிர்நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு பிரதமர் தீர்வு காண வேண்டும்: இராஜசேகரன்

கோலாலம்பூர்:

மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பு நிலையங்கள் எதிர்நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீர்வு காண வேண்டும்.


மிண்டாசின் தேசியய் தலைவர் இரா. இராஜசேகரன் இதனை வலியுறுத்தினார்.

சிவக்குமான் மனிதவள அமைச்சராக இருந்த போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் கவனத்திற்கு கொண்டு கொண்டு இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்களை பெற்றுக் கொடுத்தார்.

குறிப்பாக முடி திருத்தும் நிலையங்கள், நகைக் கடைகள், டெக்ஸ்டைல்ஸ் துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்கள் கிடைத்தார்கள்.

இருப்பினும் மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு போதுமான அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை.

இன்னும் 500 அந்நியத் தொழிலாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள்.

பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமாரை சந்தித்து இது பற்றி பேசினோம்.

எங்களுக்கு 500 தொழிலாளர்கள் கிடைக்க பிரதமரிடம் பேசுவதாக சிவக்குமார் கூறி இருக்கிறார்.

ஆக 500 அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்கும் என்று பெரிதும் நம்புகிறோம்.

மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எங்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் 25ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக இக்கூட்டத்தை பிரெஸ்மா தலைவர் டத்தோ மோசின் தொடக்கி வைத்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset