நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கவியரசின் புகழ்பாடும் பிரம்மாண்டமான கண்ணதாசன் விழா; ஜூன் 21ஆம் தேதி நடைபெறுகிறது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

மலேசிய கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் கவியரசின் புகழ்பாடும்  கண்ணதாசன் விழா 2026  பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

மஇகா துணைத் தலைவர், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர், கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவருமான டத்தோ எம். சரவணன் இதனை கூறினார்.

கவியரசு கண்ணதாசன் அவர்களின் நூற்றாண்டு விழா 2027ஐ முன்னிட்டு மாபெரும் முன்னோடித் திருவிழா நடைபெறும்.

இவ்விழா வரும் ஜூன் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணி முதல் தலைநகர் ஜாலான் ஈப்போ தண்டாயுதபாணி ஆலயத்தின் செட்டியார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் பாரதி பாஸ்கர், சிவக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் தலைமையில் கண்ணதாசன் படைப்புகளில் ஓங்கி நிற்பது... காதலா? தத்துவமா? அனுபவமா? எனும் அனல் பறக்கும் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

மரபின் மைந்தன் முத்தையா, வழக்கறிஞர் சுமதி, சிம்மாஞ்சனா, தேவி குணசேகரன், புதுகை பாரதி, இந்திரா விஜயலட்சுமி ஆகியோர் இதில் பேச்சாளர்களாக இடம் பெறவுள்ளனர்.

மேலும் மலேசியத் தமிழ் அறிஞர்கள், சமுதாயத் தலைவர்கள் பெயரில் ஐவருக்கு, அவர்களின் வாழ்நாள் சேவையைப் பாராட்டி சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.

தமிழுக்கும் கவிதைக்கும் பெருமை சேர்க்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இலக்கியத் திருவிழாவில், தவறாமல் கலந்து சிறப்பிக்க வேண்டும்

அனுமதி இலவசம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset