செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஜெர்மனி கோல் மழை
ஹாவ்ஸ்டன்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி அணியினர் கோல் மழை பொழிந்தனர்.
இ பிரிவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் வலுவான ஜெர்மனியை குராசோ அணி எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கிய 6ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் பெலிக்ஸ் நிமிச் கோல் அடித்தார்.
இதையடுத்து ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் குராசோ வீரர் லிவனோ கமெனிசியா கோல் அடித்தார்.
இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை அடைந்தன.
இதையடுத்து ருத்ர தாண்டவம் ஆடிய ஜெர்மனி வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்தனர்.
அதன்படி, நிகோ ஸ்கால்டர்பெக் 38ஆவது நிமிடத்திலும், ஹைய் ஹவெஸ்ட் 45ஆவது நிமிடத்திலும், ஜமால் முசிலா 47ஆவது நிமிடத்திலும், நதினில் பிரவுன் 68ஆவது நிமிடத்திலும், டென்னிஸ் உன்தவ் 78ஆவது நிமிடத்திலும், ஹைய் ஹவெஸ்ட் (2ஆவது கோல்) 88ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து மிரட்டினர்.
மிகவும் பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியின் றுதியில் 7-1 என்ற கோல் கணக்கில் குராசோ அணியை எளிதில் வீழ்த்தி ஜெர்மனி அபார வெற்றி பெற்றது.
குராசோ அணி நடப்பு உலகக் கிண்ண தொடரில் தகுதி பெற்று முதல் முறையாக களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 9:28 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நெதர்லாந்து - ஜப்பான் சமநிலை
June 14, 2026, 7:19 pm
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது துருக்கியே
June 14, 2026, 11:52 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 36 ஆண்டுகளில் முதல்முறையாக வென்ற ஸ்காட்லாந்து
June 14, 2026, 10:50 am
உலகக் கிண்ணம்: தோல்வியிலிருந்து மீண்டு வந்தது கத்தார்
June 14, 2026, 10:45 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: முதல் ஆட்டத்தில் பிரேசில் ஏமாற்றம்
June 13, 2026, 11:36 am
