நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஏலத்திற்கு வரும் உலகக் கிண்ணப் போட்டி நினைவுப் பொருள்கள்

லண்டன்:

நட்சத்திரக் காற்பந்து ஆட்டக்காரர் பெலே 1958இல் வென்ற உலகக் கிண்ணப் பதக்கம் முதல் கால்பந்து வரலாற்ற்றின் சிறப்புமிக்க முக்கியமான பொருள்கள் ஏலத்திற்கு வர இருக்கின்றன.

பெலே 1958இல் வென்ற உலகக் கிண்ணப் பதக்கம் 500,000 பவுண்டு ஏலத்தில் எடுக்க செலவாகலாம்.

பதக்கம் மட்டுமல்ல, இங்கிலாந்து கோல் காவலர் கோர்டன் பேங்க்ஸ் (Gordon Banks) அணிந்த ஜெர்சியும் ஏலத்திற்கு வருகிறது.

1970ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் அவர் அந்தச் சட்டையில் பெலே போட்ட கோலைத் தடுத்தார்.

இப்படி, உலகக் கிண்ணப் போட்டியுடன் தொடர்புடைய 450 பொருள்கள் விற்பனைக்கு வருகின்றன.

அவற்றின் மொத்த மதிப்பு, 2 மில்லியன் பவுண்ட். அதாவது மலேசிய ரிங்கிட் 108, 84, 024 மதிப்புடையது.

BUDDS எனும் விளையாட்டு நினைவுப்பொருள்களின் ஏல இல்லம் அனைத்தையும் விற்பனைக்குக் கொண்டுவருகிறது.

இதுவே உலகக் கிண்ணப் போட்டிகளுடன் தொடர்புடைய ஆகப் பெரிய ஏலம் என்று தெரிவிக்கப்படுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset