நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நெதர்லாந்து - ஜப்பான் சமநிலை

அர்லிங்டோன்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் நெதர்லாந்து அணியினர் சமநிலை கண்டு ரசிகர்களை ஏமாற்றினர்.

இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் எப் பிரிவில் இடம் பெற்றுள்ள நெதர்லாந்து , ஜப்பான் அணிகள் மோதின.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 
இதையடுத்து ஆட்டத்தின் 2ஆவது பாதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர்.

ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வெர்ஜில் வென் டிஜக் கோல் அடித்தார். 

இதையடுத்து, ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கைய்டொ நாக்முரா கோல் அடித்தார். 

இதனால் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளியில் சமநிலையில் இருந்தது.

ஆட்டத்தின் 64ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கிரைசென்சியொ சம்மர்வெலி கோல் அடித்தார்.

ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் 88வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டைசி கமடா கோல் அடித்தார். 

இறுதியில் ஆட்டம்  2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றது.

இப்போட்டி சமநிலை ஆனதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset