நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் எண்ணெய் விநியோகம் குறித்து புதினுடன் விவாதிக்கப்படும்: பிரதமர்

மூவார்:

நாட்டின் எண்ணெய் விநியோகம் குறித்து ரஷ்ய அதுபர் விளாடிமிர் புதினுடன் விவாதிக்கப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.


பிரதமர் அன்வர் இப்ராஹிம், அதிபர் விளாடிமிர் புதினுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்துவதற்காக இன்று ரஷ்யாவின் கசான் நகருக்குப் பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இப்பயணம் குறித்து பிரதமர் கூறியதாவது,

நாட்டின் எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்யும் செயல்திட்டம் அரசாங்கத்தின் முன்னுரிமையாகத் தொடர்கிறது.

மேலும் ஆசியான் தலைவர்களுக்கும் ரஷ்யத் தலைமைக்கும் இடையிலான சந்திப்புகளை உள்ளடக்கிய இந்தப் பயணம், மலேசியாவிற்கான எண்ணெய் விநியோகத்தின் தொடர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யப் பயன்படுத்தப்படும்.

நான் புதினைச் சந்திக்கும்போது வலியுறுத்த விரும்பும் விஷயங்களில் ஒன்று, அவர் எண்ணெயை எங்களுக்கும் கொண்டு சேர்க்கிறார் என்பதை உறுதிப்படுத்துவது தான்.

இதுதான் மக்களுடனான நமது நல்லுறவின் ரகசியம் என்று அவர் மூவாரில் நடந்த நிகழ்ச்சியில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset