செய்திகள் மலேசியா
பெர்கேசோவின் புதிய புனர்வாழ்வு மையம்; புது நம்பிக்கையையும், இரண்டாவது வாய்ப்புகளையும் வழங்குகிறது: சுல்தான் நஸ்ரின்
குலசேகரன், டத்தோஸ்ரீ சரவணன், சிவக்குமார், ஸ்டீவன் சிம், டத்தோஸ்ரீ ரமணனின் பங்களிப்பு முக்கியம் வாய்ந்தது: பேரா சுல்தான் பாராட்டு
ஈப்போ:
பேரா மாநிலத்தின் மேரு ராயாவில் அமைக்கப்பட்டுள்ள பெர்கேசோவின் அதிநவீன நியூரோ-ரோபோட்டிக், சைபர்னிக்ஸ் புனர்வாழ்வு மையத்தை பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்த நவீன மருத்துவ மறுவாழ்வு மையம் தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருப்பதோடு, பாரம்பரிய மலாய் கலாசாரக் கலை நயத்தையும் உயர் தொழில்நுட்பக் கட்டடக் கலையையும் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் ஒரு மருத்துவ வசதியாக மட்டுமல்லாமல், நாட்டின் புனர்வாழ்வு சேவைகளை மேம்பட்ட தொழில்நுட்ப நிலைக்கு உயர்த்தும் தேசியக் கனவின் அடையாளமாகவும் திகழ்வதாக சுல்தான் நஸ்ரின் ஷா கூறினார்.
விபத்துகள், பக்கவாதம், நரம்பு, முதுகுத்தண்டு பாதிப்புகள் போன்ற காரணங்களால் உடல் திறனை இழந்தவர்களுக்கு புதிய நம்பிக்கையையும் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வாய்ப்பையும் இம்மையம் வழங்கும்.
இம்மையத்தை பேராக்கில் அமைக்கும் ஆலோசனையை முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் 2018ஆம் ஆண்டில் முன்வைத்தார்.
பின்னர் டத்தோஸ்ரீ எம். சரவணன், வீ, சிவக்குமார், ஸ்டீவன் சிம், தற்போதைய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோரின் தொடர்ச்சியான ஆதரவின் மூலம் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
மேலும்.இம்மையத்தின் வெற்றிக்கு பேரா மந்திரி புசார் டத்தோஸ்ரீ சாராணி முகமட், மாநில அரசுத் துறைகள் வழங்கிய ஒத்துழைப்பும் முக்கிய பங்காற்றியதாக சுல்தான் பாராட்டினார்.
புனர்வாழ்வு என்பது உடல் மீட்சியுடன் மட்டுப்படாமல், மன உறுதி, நம்பிக்கை மற்றும் உணர்ச்சி ரீதியான மீட்சியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
மேலும் அதிநவீன ரோபோட்டிக் தொழில்நுட்பங்களுடன் மனிதநேய அணுகுமுறையும் இணைந்தால்தான் முழுமையான சிகிச்சை சாத்தியமாகும் என்றார்.
உடல் ஊனமுற்றோர் அல்லது கடுமையான காயங்களுக்கு உள்ளானவர்களை சமூகம் சுமையாகக் கருதாமல், அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சமூகத்தில் மீண்டும் இணையும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில், மையத்திற்கு சுல்தான் நஸ்ரின் ஷா பெர்கேசோ புனர்வாழ்வு மையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 12:04 pm
போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் விற்பனை: செவிலியர் உட்பட 5 பேர் கைது
June 16, 2026, 10:49 am
தைப்பிங் சிறை சம்பவம்; ஒருவர் மீது குற்றச்சாட்டு: ஐவர் மீது ஒழுங்கு நடவடிக்கை
June 16, 2026, 10:47 am
ஜொகூரில் மாற்றத்தைக் கொண்டுவர நம்பிக்கை கூட்டணியை தேர்ந்தெடுங்கள்: பிரதமர்
June 16, 2026, 10:47 am
ஜூன் மாத இறுதிக்குள் எல்ஆர்டி 3 சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: அந்தோனி லோக்
June 16, 2026, 10:46 am
