நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காஜாங்கில் அடுக்குமாடி குடியிருப்பின் 7ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுவன் மரணம்

காஜாங்:

காஜாங்கில் உள்ள தாமான் செபாகாட் இந்தாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் 11 வயது சிறுவன் உயிரிழந்தான்.

காஜாங் காவல்துறைத் தலைவர் நாஸ்ரான் அப்துல் யூசோப் இதனை கூறினார்.

காலை சுமார் 7.12 மணியளவில் இது தொடர்பாக போலிசாருக்கு  ஒரு அவசர அழைப்பு வந்தது.

அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் இருந்து ஒரு குழந்தை தவறி விழுந்ததாகப் புகாரளித்தவர் தெரிவித்ததாக அவர் கூறினார்.

ஆரம்பகட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் 7ஆவது மாடியில் இருந்து விழுந்த 11 வயது உள்ளூர் சிறுவன் என்பது தெரியவந்தது.

சம்பவ இடத்திலேயே மருத்துவ அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது, என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset