நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜூன் மாத இறுதிக்குள் எல்ஆர்டி 3 சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: அந்தோனி லோக்

சிப்பாங்:

சிலாங்கூர் ஷாஆலம் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளை இணைக்கும் எல்ஆர்டி 3 சேவையின் செயல்பாடுகள் இந்த மாத இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை தெரிவித்தார்.

சேவை தொடங்கும் தேதி இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும்.

இந்தத் திட்டம் தற்போது சோதனை ஓட்டத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சோதனை ஓட்டங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு, எல்ஆர்டி 3 செயல்பாடுகளைத் தொடங்கலாம் என்று நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்," 

சிப்பாங்கில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு மன்றத்தின் 62ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், மலேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தை நிறுவுவதற்கான மசோதா, அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படாது.

இவ்வாரியத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

ஆனால் தற்போது நாங்கள் பணியாளர்கள், பிற விஷயங்கள் குறித்து பொது சேவைத் துறையுடன் விவாதித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset