செய்திகள் மலேசியா
ஜொகூரில் மாற்றத்தைக் கொண்டுவர நம்பிக்கை கூட்டணியை தேர்ந்தெடுங்கள்: பிரதமர்
மூவார்:
ஜொகூரில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமானால், மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
மாநில, மத்திய அரசுகள் இணைந்து செயல்படும்போது, ஜொகூர் மக்களுக்குப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவர முடியும்.
பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் இதனை கூறினார்.
அதனால் தான் நான் சொல்கிறேன், ஜொகூர் மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டுவர, நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் மாபெரும் திட்டத்தைத்தான் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி உருவாக்கியது.
தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்தை மத்திய அரசு தான் விரிவுபடுத்தியது.
அதற்காக ஜொகூர் அரசாங்கம் உதவவில்லை என்று நான் கூறவில்லை. அது உதவுகிறது.
ஆனால் அதை யார் செய்கிறார்கள்? நாங்கள் தான் செய்கிறோம்.
எனவே, ஜொகூர் மாநிலம் ஒரு பிரதிநிதியாக இருக்க வேண்டும். மாநிலம் தனது கொள்கையை மாற்ற வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.
திட்டத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நான் அதைக் கவனித்துக் கொள்வேன்.
மாநில அரசு, மாநிலப் பிரதிநிதிகள், மாநில செயற்குழு, கீழ்மட்ட மக்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நேற்று இரவு இங்குள்ள புக்கிட் பக்ரியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 12:04 pm
போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் விற்பனை: செவிலியர் உட்பட 5 பேர் கைது
June 16, 2026, 10:49 am
தைப்பிங் சிறை சம்பவம்; ஒருவர் மீது குற்றச்சாட்டு: ஐவர் மீது ஒழுங்கு நடவடிக்கை
June 16, 2026, 10:47 am
ஜூன் மாத இறுதிக்குள் எல்ஆர்டி 3 சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: அந்தோனி லோக்
June 16, 2026, 10:46 am
