செய்திகள் மலேசியா
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி: மாக் மண்டின், பெர்மாதாங் திங்கி தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின
பட்டர்வொர்த்:
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் மாக் மண்டின், பெர்மாதாங் திங்கி தமிழ்ப்பள்ளிகள் முதல் நிலையில் வாகை சூடின.
இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் ஸ்ரீ இதனை கூறினார்.
ஆண்களுக்கான டத்தோ பி.கே. சுப்பையா கிண்ணம், பெண்களுக்கான திரிதோனி கிண்ண கால்பந்து போட்டியில் 12 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.
இதில் ஆண்கள் பிரிவில் 28 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 26 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 பள்ளிகளும் பங்கேற்றன.
பினாங்கு இந்தியர் கால்பந்து சங்கம், பினாங்கு மாநில தலைமை ஆசிரியர்கள் மன்றம், ராமதாசர் தமிழ்ப்பள்ளி ஆகியவை இணைந்து இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்தன.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும், பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவருமான ஆர்.எஸ்.என். ராயர் இந்தப் போட்டி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கி வைத்தார்.
பினாங்கு தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்றத்தின் தற்காலிகத் தலைவர் ஏ. சக்திவேலோ, பினாங்கு இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் பி. பிரேம்குமார், மீபா தலைவர் கேவி அன்பா, மீபா உதவித் தலைவர் ஸ்ரீ ஆகியோரும் உடனிருந்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் ஆண்கள் பிரிவில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வெற்றி பெற்றது.
பிறை, பழனியாண்டி, பிறை தோட்டம் ஆகிய தமிழ்ப்பள்ளிகள் அடுத்தடுத்த நிலையில் வெற்றி பெற்றன.
பெண்கள் பிரிவில் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வெற்றி பெற்றது.
மலாக்கோவ் தோட்டம், ஜாவி தோட்டம், டிரான்ஸ்கிரியான் தோட்டம் ஆகிய தமிழ்ப்பள்ளிகள் அடுத்தடுத்த நிலையில் வெற்றி பெற்றன.
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ இப்போட்டியை நிறைவு செய்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.
காலஞ்சென்ற டத்தோ பி.கே. சுப்பையாவின் மகன் கணேஷ் சுப்பையா, டிரிடோனி ஸ்போர்ட்ஸ்வேர் நிறுவனத்தின் உரிமையாளரும் கஜா புத்தி இயக்குநருமான சங்கர் முனியாண்டி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அவர்கள் அனைத்து வெற்றியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு, ஏற்பாட்டாளர்கள், பள்ளிகள், பெற்றோர்களின் முயற்சிகளையும் பாராட்டினர் என்று ஸ்ரீ கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 12:04 pm
போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் விற்பனை: செவிலியர் உட்பட 5 பேர் கைது
June 16, 2026, 10:49 am
தைப்பிங் சிறை சம்பவம்; ஒருவர் மீது குற்றச்சாட்டு: ஐவர் மீது ஒழுங்கு நடவடிக்கை
June 16, 2026, 10:47 am
ஜொகூரில் மாற்றத்தைக் கொண்டுவர நம்பிக்கை கூட்டணியை தேர்ந்தெடுங்கள்: பிரதமர்
June 16, 2026, 10:47 am
ஜூன் மாத இறுதிக்குள் எல்ஆர்டி 3 சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: அந்தோனி லோக்
June 16, 2026, 10:46 am
