செய்திகள் மலேசியா
கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் முஸ்லிம்களின் பலத்தை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்
புத்ராஜெயா:
கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் முஸ்லிம்களின் பலத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நீதி, கருணை, உலகளாவிய மனிதாபிமானம் ஆகிய விழுமியங்களைக் கடைப்பிடிப்பதுடன், கல்வி, பொருளாதார வளர்ச்சி, அறிவு, தொழில்நுட்பத்தில் தேர்ச்சி ஆகியவற்றின் மூலம் முஸ்லிம்களின் பலத்தை வலுப்படுத்த வேண்டும்
புத்ராஜயாவில், ரபிதா அல்-ஆலம் அல்-இஸ்லாமியின் பொதுச் செயலாளர் ஷேக் டாக்டர் முஹம்மது அப்துல் கரீம் அலிசாவை பிரதமர் சந்தித்தபோது இந்த விஷயம் குறித்து பிரதமர் கலந்துரையாடினார்
உலகெங்கிலும் உள்ள பல்வேறு மதங்களைச் சேர்ந்த சமூகங்கள், பின்பற்றுபவர்களிடையே நெருங்கிய உறவுகளை ஏற்படுத்துவதற்கான தொடர்ச்சியான உரையாடல்,
பரஸ்பர மரியாதை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் மூலமே மிகவும் அமைதியான, நிலையான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதையும் நாங்கள் ஒப்புக்கொண்டோம் என்று அவர் கூறினார்.
இஸ்லாமிய உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், மதங்களுக்கிடையிலான புரிதலை வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள பிரதமர், ஷேக் டாக்டர் முஹம்மதுவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 3:04 pm
ஜொகூரில் 4 தொகுதிகளிலும் நெகிரி செம்பிலானில் 3 தொகுதிகளிலும் எம்ஐபிபி கட்சி போட்டி
June 15, 2026, 12:39 pm
போதைப்பொருள் கடனுக்காக பிணையாக வைக்கப்பட்ட 2 மலேசியர்கள் மீட்கப்பட்டனர்
June 15, 2026, 11:52 am
மலேசிய ஊடக கவுன்சிலின் தலைவராக டான் ஸ்ரீ நளினி பத்மநாதன் நியமனம்
June 15, 2026, 11:41 am
புதிய அரசியல் கட்சி; மலாய் மக்களைப் பிளவுபடுத்தாது: ஜாஹித்
June 15, 2026, 11:09 am
