நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய ஊடக கவுன்சிலின் தலைவராக டான் ஸ்ரீ நளினி பத்மநாதன் நியமனம்

பெட்டாலிங் ஜெயா: 

முன்னாள் கூட்டாட்சி நீதிமன்றத்தின் நீதிபதி டான் ஸ்ரீ நளினி பத்மநாதன், மலேசிய ஊடக கவுன்சிலின் (MMC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மே 26 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மலேசிய ஊடக கவுன்சில் வாரிய உறுப்பினர்களால் அவரது நியமனம் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்த நியமனம் ஒரு சுய-ஒழுங்குமுறை அமைப்பாக, சுதந்திரமான, அதிகாரப்பூர்வமான, பொது நலன் சார்ந்த நிறுவனமாக அதன் பங்கை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று மலேசிய ஊடக கவுன்சில் ஒரு அறிக்கையில் கூறியது.

டான் ஸ்ரீ நளினி, நீதித்துறையில் 18 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, கடந்த பிப்ரவரியில் கூட்டாட்சி நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்றார்.

தனது பணிக்காலம் முழுவதும், அவர் உயர்நீதித்துறையின் மூன்று நிலைகளிலும் பணியாற்றியதோடு அரசியலமைப்பு, வணிகச் சட்டங்கள் தொடர்பான வழக்குகள் உட்பட, சுமார் 325 அறிக்கை செய்யப்பட்ட தீர்ப்புகளை வழங்கினார்.

மேலும், மலேசியாவின் உயர்நீதித்துறைக்கு நியமிக்கப்பட்ட முதல் தெற்காசியப் பெண் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார்.

தற்போது, டான் ஸ்ரீ நளினி சர்வதேச வழக்கறிஞர் சங்கத்தின் (IBA) நீதிபதிகள் மன்றத்தின் துணைத் தலைவர் உட்பட பல முக்கிய சர்வதேசப் பதவிகளை வகிப்பதோடு, நடுவர், சமரசத் தீர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

அந்த அறிக்கையின்படி, அவரது விரிவான அனுபவம், சட்டத்தின் ஆட்சி, நீதியை அணுகுவதற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை அவரை மலேசிய ஊடக கவுன்சிலை வழிநடத்த மிகவும் பொருத்தமான வேட்பாளராக ஆக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கைத் தரங்களை வலுப்படுத்துவதற்கும், பொதுமக்களின் புகார்களைக் கையாள்வதற்கும், தார்மீக ஊடக நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், மலேசிய ஊடகத் துறையின் சுய ஒழுங்குமுறை அமைப்பாக மலேசிய ஊடகக் கவுன்சில், மலேசிய ஊடகக் கவுன்சில் சட்டம் 2025-இன் கீழ் நிறுவப்பட்டது.

டான் ஸ்ரீ நளினியின் தலைமையின் கீழ், இந்த மன்றம் நிறுவன ரீதியான பலப்படுத்துதல், நடத்தை விதிமுறைகளைச் செயல்படுத்துதல், ஒரு நியாயமான புகார் அமைப்பை உருவாக்குதல், ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு குறித்த பொது விழிப்புணர்வை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொருளாதார அழுத்தங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், செயற்கை நுண்ணறிவு (AI), தவறான தகவல்களின் பரவல், ஊடகங்களில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் தேவை உள்ளிட்ட பல்வேறு சவால்களை ஊடகத் துறை எதிர்கொள்ளும் நேரத்தில் அவரது நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடகத் தரங்கள், நெறிமுறைக, சுதந்திரம் ஆகியவற்றின் கொள்கைகளில் வேரூன்றிய, மேலும் முதிர்ச்சியான, சுதந்திரமான, அதிகாரப்பூர்வமான நிறுவனமாக இந்த அமைப்பை டான் ஸ்ரீ நளினி அவர்களின் தலைமை வழிநடத்திச் செல்லும் என்று மலேசிய ஊடகக் கவுன்சில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset