செய்திகள் மலேசியா
4 பேர் மரணமடைந்த விபத்து: டிரெய்லர் ஓட்டுநருக்கு ஏற்கனவே 15 சம்மன்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன: போலிஸ்
பெந்தோங்:
காராக் நெடுஞ்சாலையில் நான்கு பேர் உயிரிழந்த விபத்தில் சம்பந்தப்பட்ட டிரெய்லர் லோரி ஓட்டுநர் மீது இதற்கு முன்னர் 15 முறை சம்மன்கள் நிலுவையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதை பகாங் மாநில போலிஸ் தலைவர் யஹாயா ஓத்மான் உறுதிப்படுத்தினார்.
மேலும், 40 வயதான அந்த நபரிடமிருந்து நச்சுயியல் பகுப்பாய்விற்காக இரத்த மாதிரியும் எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையை நிறைவு செய்வதற்கும், சம்பவத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிவதற்கும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அலட்சியமான அல்லது அபாயகரமான ஓட்டுதலால் மரணத்தை ஏற்படுத்தியதற்காக, 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, மரத்தூள் ஏற்றிச் சென்ற டிரெய்லர் கவிழ்ந்து ஹோண்டா சிட்டி கார் மீது மோதிய விபத்தில், ஒரு வயது குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
டிரெய்லரின் ஓட்டுநருக்கு தலை, இடுப்பில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகிறார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 12:39 pm
போதைப்பொருள் கடனுக்காக பிணையாக வைக்கப்பட்ட 2 மலேசியர்கள் மீட்கப்பட்டனர்
June 15, 2026, 11:52 am
மலேசிய ஊடக கவுன்சிலின் தலைவராக டான் ஸ்ரீ நளினி பத்மநாதன் நியமனம்
June 15, 2026, 11:41 am
புதிய அரசியல் கட்சி; மலாய் மக்களைப் பிளவுபடுத்தாது: ஜாஹித்
June 15, 2026, 11:09 am
அமெரிக்காவில் ஆடம்பர சொத்து வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ரோஸ்மா மறுத்தார்
June 15, 2026, 11:04 am
பெர்சாமா கட்சியால் 50 வயதுக்குட்பட்ட 70% வேட்பாளர்களை களமிறக்க முடியும்: ரபிசி
June 15, 2026, 10:29 am
நில உரிமையாளரே தட்டுப்பாட்டை வாடகைக்கு வழங்க முன்வந்ததாக ரோஹிங்கியர்களின் கூற்று
June 15, 2026, 10:26 am
டிரெய்லர் லோரி கார் மீதி கவிழ்ந்த சம்பவத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்
June 15, 2026, 9:30 am
