நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதைப்பொருள் கடனுக்காக பிணையாக வைக்கப்பட்ட 2 மலேசியர்கள் மீட்கப்பட்டனர்

கோத்தா பஹாரு: 

 பாசீர் மாஸ், தும்பாட் ஆகிய இடங்களில் கடத்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, போதைப்பொருள் கடன்கள், சட்டவிரோதக் குடியேறிகளைக் கடத்துதல் தொடர்பான வழக்கில், தாய்லாந்தின் முண்டோக்கில் இரண்டு மலேசியர்கள் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கிளந்தான் காவல்துறைத் தலைவர், டத்தோ முஹம்மத் யூசுப் மமத், 51, 35 வயதுடைய பாதிக்கப்பட்ட இருவரும் தாய்லாந்து காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் நாடு திரும்ப அழைத்து வரப்பட்டதாகக் கூறினார்.

அவர்களில் ஒருவருக்கு 24 முந்தைய குற்றப் பதிவுகள் இருந்ததாகவும், அவர்களது உறவினர் 33,000 ரிங்கிட் கடனைச் செலுத்தத் தவறியதால், ஜூன் 6 அன்று பிணைப் பொருளாகப் பயன்படுத்தும் நோக்கில் இருவரும் கடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக நான்கு ஆண்களையும் ஒரு பெண்ணையும் காவல்துறை கைது செய்து வரும் 22 ஜூன் வரை தடுப்பு காவலில் வைத்துள்ளது.

"இந்தக் கடத்தல், போதைப்பொருள் கடன், சட்டவிரோதக் குடியேறிகளைக் கடத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றும், இதன் மொத்த மதிப்பு 33,000 ரிங்கிட் என்றும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது," என்று அவர் இன்று இங்குள்ள கிளந்தான் மாநில காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இதற்கிடையில், 32 வயதான முஹம்மத் ஷாம்சுல் அஸ்ரோய் செ அனுவார், 40 வயதான ஹம்சா முஹம்மத் ஆகிய இரண்டு முக்கிய சந்தேக நபர்களையும் காவல்துறை இன்னும் தேடி வருவதாகவும், அவர்கள் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றிருப்பதாக நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

"சந்தேக நபர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவரைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்று நம்பப்படும் தங்களின் பெரோடுவா மைவி காருக்கு எரித்துள்ளனர்," என்று அவர் கூறினார்.

அவருடைய கூற்றுப்படி, அவர்கள் இப்போது அண்டை நாட்டில் பதுங்கியிருப்பதால், அவர்களைக் கண்டுபிடிக்க தாய்லாந்து காவல்துறையின் உதவியையும் அவர்கள் கோரியுள்ளனர்.

"தேடப்படும் இரண்டு சந்தேக நபர்களில் ஒவ்வொருவருக்கும் போதைப்பொருள், குற்றவியல் வழக்குகள் தொடர்பான 10 பதிவுகள் உள்ளன," என்று அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset