செய்திகள் மலேசியா
கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவராக விகேகே ராஜசேகரன் வெற்றி
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் புதிய தலைவராக விகேகே ராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற தேர்தலில் அவர் 155 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவருக்கு எதிராக போட்டியிட்ட பிரபாகரன் வைத்தியலிங்கம் 148 வாக்குகள் பெற்றார்.
இதன் மூலம் 7 வாக்குகள் வித்தியாசத்தில் இராஜசேகரன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் மோகனா சின்னத்தம்பி 166 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர் 137 வாக்குகள் பெற்றார்.
உதவித் தலைவர் பதவிக்கான தேர்தலில் டாக்டர் சித்ரா தேவி 153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவருக்கு எதிராக போட்டியிட்ட கவிமாறன் எனப்படும் குமரன் முனியாண்டி 149 வாக்குகள் பெற்றார்.
பொருளாளர் பதவிக்கான போட்டியில் ஐ.ஆர். பிரபாகரன் 158 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சண்முக செல்வி 144 வாக்குகள் பெற்றார்.
14 பேர் கொண்ட நிர்வாக உறுப்பினர்கள் தேர்தலில் குமரகுரு (203), பிரவின் டத்தோ தமிழ்ச்செல்வம் (172), டாக்டர் ராஜசேகரன் மோகன் (171), குளோரி (168), டத்தோ கணேஷ் (167), ஜெயா (166), டாக்டர் புவனேஸ்வரி (164), ராம்குமார் (163), டத்தோ சந்திரசேகரன் (162), டாக்டர் நெடுஞ்செழியன் (161), டோனி கிளிபெர்ட் (161), டாக்டர் செல்வராஜூ (159), வர்மன் கந்தசாமி (157) மற்றும் குட்டி கிருஷ்ணன் மாதவன் (154) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 3:24 pm
நெகிரி செம்பிலானில் உள்ள துரோக சக்திகளை பிரதமர் ஆதரித்தார்
June 14, 2026, 3:22 pm
43 ஆண்டுகளுக்குப் பிறகு பண்டார் சிகாமாட் தமிழ்ப்பள்ளிக்கு புதிய விடிவுகாலம் பிறந்தது: ஜலேஹா
June 14, 2026, 3:21 pm
தேசிய உணர்வை வலுப்படுத்த அரசியல் முதிர்ச்சி அவசியம்: பிரதமர்
June 14, 2026, 3:20 pm
ஜைட் இப்ராஹிம், முகமது ரபி, ரஹிமி ஒஸ்மான் உட்பட 15 பேர் பாஸ் கட்சியில் இணைந்தனர்
June 14, 2026, 11:31 am
