செய்திகள் மலேசியா
ஜைட் இப்ராஹிம், முகமது ரபி, ரஹிமி ஒஸ்மான் உட்பட 15 பேர் பாஸ் கட்சியில் இணைந்தனர்
சிரம்பான்:
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள் அடங்கிய 15 பேர் பாஸ் கட்சியில் இணைந்தனர்.
நெகிரி செம்பிலான் தேர்தல் பொதுப் கூட்டத்தில் அறிவித்தபோது பாஸ் இந்த புதிய உறுப்பினர்களை பெற்றது.
பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தகியுடின் ஹாசன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கவனத்தை ஈர்த்த பெயர்களில் முன்னாள் நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர், முன்னாள் அம்பாங்கன் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் ரபி அப்துல் மாலேக்; பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் (சட்டம்) டத்தோ முகமட் ஜைட் இப்ராஹிம், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் தனிச் செயலாளர் ரஹிமி ஒஸ்மானும் அடங்குவர்.
பேரா மாநிலத்தின் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினரும், பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான டத்தோ ஹமிதா ஓத்மான், நெகிரி செம்பிலான் அமானா கட்சியின் முன்னாள் தலைவர் டாக்டர் ரோஸ்லி யாக்கூப் ஆகியோரும் பாஸ் கட்சியில் இணைந்தனர்.
இதே போன்று பல தலைவர்கள் பாஸ் கட்சியில் இணைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 11:41 pm
கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவராக விகேகே ராஜசேகரன் வெற்றி
June 14, 2026, 3:24 pm
நெகிரி செம்பிலானில் உள்ள துரோக சக்திகளை பிரதமர் ஆதரித்தார்
June 14, 2026, 3:22 pm
43 ஆண்டுகளுக்குப் பிறகு பண்டார் சிகாமாட் தமிழ்ப்பள்ளிக்கு புதிய விடிவுகாலம் பிறந்தது: ஜலேஹா
June 14, 2026, 3:21 pm
தேசிய உணர்வை வலுப்படுத்த அரசியல் முதிர்ச்சி அவசியம்: பிரதமர்
June 14, 2026, 11:31 am
