செய்திகள் மலேசியா
வேலை இழந்தவர்களுக்கு உதவவும், தொழிலாளர் சந்தையின் மீள்திறனை வலுப்படுத்தவும் கெசுமா பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
புத்ராஜெயா:
வேலை இழந்தவர்களுக்கு உதவவும், தொழிலாளர் சந்தையின் மீள்திறனை வலுப்படுத்தவும் கெசுமா பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்துகிறது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்தம் 38,953 பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் 25 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள்.
சொக்சோவின் கீழ் உள்ள வேலைவாய்ப்புக் காப்பீட்டு அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, ஆண்கள் 23,536 வழக்குகளையும் (60.4 சதவீதம்), பெண்கள் 15,417 வழக்குகளையும் (39.6 சதவீதம்) பதிவு செய்துள்ளனர்.
ஜனவரி முதல் மே வரையிலான வேலை இழப்புகள், பொருளாதாரத்தின் பல முக்கியத் துறைகளான உற்பத்தித் துறை, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், மோட்டார் வாகனப் பழுதுபார்ப்பு, அத்துடன் நிர்வாக, ஆதரவு சேவை நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஏற்பட்டது.
தற்போதைய பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்வதற்காக மேற்கொண்ட அமைப்புசார் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், வணிகச் செயல்பாடுகளில் செய்யப்பட்ட மாற்றங்களே இந்த நிலைமைக்கு முக்கியக் காரணம்.
2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பல்வேறு பொருளாதாரத் துறைகளில் பதிவான வேலை இழப்புகளின் அதிகரிப்பை மனிதவள அமைச்சு (கெசுமா) தீவிரமாகக் கருதுகிறது.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குப் புதிய வேலைகளைக் கண்டறியவும், திறன்களை மேம்படுத்தவும்,
உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு நாட்டின் தொழிலாளர் சந்தையின் மீள்திறனை வலுப்படுத்தவும் பல்வேறு தலையீட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 11:41 pm
கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவராக விகேகே ராஜசேகரன் வெற்றி
June 14, 2026, 3:24 pm
நெகிரி செம்பிலானில் உள்ள துரோக சக்திகளை பிரதமர் ஆதரித்தார்
June 14, 2026, 3:22 pm
43 ஆண்டுகளுக்குப் பிறகு பண்டார் சிகாமாட் தமிழ்ப்பள்ளிக்கு புதிய விடிவுகாலம் பிறந்தது: ஜலேஹா
June 14, 2026, 3:21 pm
தேசிய உணர்வை வலுப்படுத்த அரசியல் முதிர்ச்சி அவசியம்: பிரதமர்
June 14, 2026, 3:20 pm
ஜைட் இப்ராஹிம், முகமது ரபி, ரஹிமி ஒஸ்மான் உட்பட 15 பேர் பாஸ் கட்சியில் இணைந்தனர்
June 14, 2026, 11:31 am
