நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்களில் தேசிய முன்னணி தராசு சின்னத்தை பயன்படுத்தும்: ஜம்ரி

ஜொகூர்பாரு:

ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்களில் தேசிய முன்னணி தனது தராசு சின்னத்தை பயன்படுத்தும்.

தேசிய முன்னணி தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிர் இதனை கூறினார்.

வரவிருக்கும் ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில்  தராசு சின்னத்தைப் பயன்படுத்திப் போட்டியிடுவதற்கான தனது நிலைப்பாட்டை தேசிய முன்னணி இறுதி செய்துள்ளது.

ஜொகூர் அம்னோ தொடர்பு அலுவலகத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டணியின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஐந்து முக்கிய முடிவுகளில் இதுவும் ஒன்றாகும்.

ஜொகூர், நெகிரி செம்பிலான்  தேர்தல்களே தேசிய முன்னணியின் முக்கியக் கவனமாக உள்ளது. 

வெற்றியை உறுதி செய்வதற்காகக் கட்சியின் முழு கேந்திரமும் விரிவாகத் திரட்டப்பட்டுள்ளது.

தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை அதற்கு ஆதரவளிப்பதில் தேசிய முன்னணி உறுதியாக இருக்கும் என்றும் உயர்கல்வி அமைச்சருமான அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கவும், மக்களின் நலனுக்காகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் தொடர்ச்சியை உறுதி செய்யவும் இந்த உறுதிப்பாடு முக்கியமானது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset