செய்திகள் மலேசியா
தேசிய உணர்வை வலுப்படுத்த அரசியல் முதிர்ச்சி அவசியம்: பிரதமர்
கோத்தா கினபாலு:
ஒற்றுமை எனும் விழுமியங்களின் மீது கட்டப்பட்ட ஒரு தேச அரசின் உணர்வைப் பாதுகாத்து வலுப்படுத்த, மலேசியாவிற்கு முதிர்ச்சி, நிதானம் மற்றும் அரசியல் ஞானம் தேவை.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
சமூகத்தைப் பிளவுபடுத்தக்கூடிய எந்தவொரு கூறுகளையும் நிராகரிப்பதுடன், தேச உருவாக்கத்தின் அடித்தளமாக விளங்கிய பன்முகத்தன்மையை பரஸ்பர மரியாதை உணர்வின் மூலம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.
அதனால்தான் தீபகற்ப மாநிலங்கள், சபா, சரவா, பல்வேறு இனக்குழுக்கள், வெவ்வேறு நிறத் தோல் கொண்டவர்கள் நமக்கு சவாலாக உள்ளனர்.
இந்த தேசத்தின் ஆன்மாவைப் பாதுகாத்து வலுப்படுத்த, அரசியலில் நமக்கு முதிர்ச்சி, நிதானம், ஞானம் தேவை.
லிகாஸ் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற 2026 தேசிய ஒற்றுமை வாரக் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றியபோது பிரதமர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 11:41 pm
கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவராக விகேகே ராஜசேகரன் வெற்றி
June 14, 2026, 3:24 pm
நெகிரி செம்பிலானில் உள்ள துரோக சக்திகளை பிரதமர் ஆதரித்தார்
June 14, 2026, 3:22 pm
43 ஆண்டுகளுக்குப் பிறகு பண்டார் சிகாமாட் தமிழ்ப்பள்ளிக்கு புதிய விடிவுகாலம் பிறந்தது: ஜலேஹா
June 14, 2026, 3:20 pm
ஜைட் இப்ராஹிம், முகமது ரபி, ரஹிமி ஒஸ்மான் உட்பட 15 பேர் பாஸ் கட்சியில் இணைந்தனர்
June 14, 2026, 11:31 am
