நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

43 ஆண்டுகளுக்குப் பிறகு பண்டார் சிகாமாட் தமிழ்ப்பள்ளிக்கு புதிய விடிவுகாலம் பிறந்தது: ஜலேஹா

ஜொகூர் பாரு:

கிட்டத்தட்ட 43 ஆண்டுகளுக்குப் பிறகு பண்டார் சிகாமாட் தமிழ்ப்பள்ளிக்கு புதிய விடிவுகாலம் பிறந்தது.

செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலேஹா முஸ்தபா கூறினார்.

கடந்த 1983ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த பள்ளி நில எல்லை பிரச்சினையை ஆய்வு செய்வதற்காக நான் பண்டார் சிகாமாட் தமிழ்ப்பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டேன்.

இந்த நிலப்பிரச்சினை, பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக விளையாட்டு மைதானம் அமைக்க முன்மொழியப் பட்ட லோட் 8740 நிலத்தைச் சார்ந்ததாகும்.

குறிப்பாக, ஹாக்கி விளையாட்டில் மாவட்ட மற்றும் தேசிய அளவிலான பல சாதனைகளைப் படைத்துள்ள இந்தப் பள்ளிக்கு, சிறந்த விளையாட்டு வசதிகள் மிகவும் அவசியமானவை.

ஆய்வின் போது, ஜொகூர் மாநிலக் கல்வித் துறை, மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்ட நில அலுவலகம் ஆகியவற்றில் உள்ள நில எல்லை வரைபடங்கள், மலேசிய நில அளவை, வரைபடத் துறையின் MyLot செயலியில் காணப்படும் தகவல்களுடன் பொருந்தாதது கண்டறியப்பட்டது.

இந்த முரண்பாடே, 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலப்பிரச்சினை தீர்க்கப்படாமல் நீடித்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

இன்று நேரடிப்பார்வைக் குப் பின்னர், இவ்விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அடங்கிய முழுமையான அறிக்கை  கல்வியமைச்சர்  ஃபட்லினா சிடேக்கின் மேலாய்வு, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக நான் ஒப்படைத்தேன்.

இந்த விவகாரத்தில் அக்கறையுடன் விரைவான நடவடிக்கை எடுத்த  கல்வியமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று, மிகவும் நெருக்கடியான அதிகாரப்பூர்வ பணிநிரலுக்கு மத்தியிலும், அவர் நேரடியாக பண்டார் சிகாமாட் பள்ளிக்கு வருகை தந்து, நிலத்தின் ஆரம்பகட்ட பயன்பாட்டு அனுமதிக் கடிதத்தை வழங்கினார்.

இது, 1983ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முக்கியமான முதல் படியாகும்.

இந்த அனுமதிக் கடிதம், பள்ளி நிர்வாகம், பெற்றோர்-ஆசிரியர் சங்கம், பெற்றோர்கள், மாணவர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த நம்பிக்கைக்கு புதிய ஒளியைக் கொண்டு வந்துள்ளது.

மேலும், கல்வி மற்றும் நமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான விசயங்களில் மடானி அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை யும் இது வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset