நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் புறக்கணித்து ஆயிரக்கணக்கான மலேசியர்கள் தெற்கு தாய்லாந்திற்குத் தொடர்ந்து செல்கின்றனர்: போலிஸ்

கோத்தாபாரு:

பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் புறக்கணித்து ஆயிரக்கணக்கான மலேசியர்கள் தெற்கு தாய்லாந்திற்குத் தொடர்ந்து செல்கின்றனர்.

கிளந்தான் மாநில போலிஸ் தலைவர் டத்தோ முகமது யூசோப் மாமாட் இதனை கூறினார்.

பண்டிகைக் காலங்கள், பள்ளி விடுமுறை நாட்களில், ஆயிரக்கணக்கான மலேசியர்கள் பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் புறக்கணித்து தெற்கு தாய்லாந்திற்குள் நுழைய வரிசையில் நிற்கின்றனர்.

இதற்கு வெளிநாட்டில் விடுமுறையைக் கழிக்க வேண்டும் என்ற ஆசையே முக்கியக் காரணங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

பாசிர் மாஸில் உள்ள ரந்தாவ் பாஞ்சாங், தும்பத்தில் உள்ள பெங்கலான் குபோர், தானா மெராவில் உள்ள புக்கிட் பூங்கா ஆகிய மூன்று அதிகாரப்பூர்வ நுழைவுப் புள்ளிகளான குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல், பாதுகாப்பு வளாகங்களில் மேற்கொள்ளப்பட்ட தினசரி சோதனைகளில், மக்கள் அதிக அளவில் உள்ளேயும் வெளியேயும் செல்வது தெரியவந்தது.

வார நாட்களில் சுமார் 3,000 பேர் எல்லையைக் கடப்பதாகப் பதிவு செய்யப்படுவதாகவும், வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை 4,000க்கும் அதிகமாக உயர்கிறது.

பள்ளி விடுமுறைக் காலம் வரும்போது, ​​இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 6,000 முதல் 7,000 பேர் வரை கணிசமாக அதிகரிக்கிறது.

ஒட்டுமொத்தமாக, எல்லை அனுமதிச் சீட்டு, கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் உள் மற்றும் வெளிப் போக்குவரத்து ஒரு நாளைக்கு 10,000 பேரை எட்டக்கூடும்.

ஆனால் தெற்கு தாய்லாந்தின் பாதுகாப்பு நிலைமையைக் கணிப்பது கடினம் என்பதை நாங்கள் பொதுமக்களுக்கு எப்போதும் நினைவூட்டுகிறோம்.

எப்போது வெடிப்பு அல்லது துப்பாக்கிச் சூடு சம்பவம் எப்போது, ​​எங்கே நிகழும் என்பது யாருக்கும் தெரியாது.

கடந்த ஆண்டு முதல் விஸ்மா புத்ரா விடுத்த பயண எச்சரிக்கை இன்னும் அமலில் உள்ளது.

ஆனால் எங்களில் பலர் அதைப் புறக்கணித்துவிட்டு, இன்னும் வரிசையில் நிற்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset