செய்திகள் விளையாட்டு
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா வெற்றி
நியூயார்க்:
அனைத்துலக நட்புமுறை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அணியினர் வெற்றி பெற்றனர்.
ஜோர்டன் ஹார் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் ஐஸ்லாந்து அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜெண்டினா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
காயத்தில் இருந்து மீண்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அர்ஜெண்டினா அணிக்கு ஒரு கோலை அடித்தார்.
மற்ற கோல்களை வெலாடின் பார்கோ, தியாகோ அர்மாடோ ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் வெனிசூலா அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ஈராக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
சவூதி அரேபியா அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் செனகல் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 11, 2026, 8:38 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: போர்த்துகல், இங்கிலாந்து வெற்றி
June 10, 2026, 8:33 am
தீனா - பியெர்லி தான் ஜோடி உலக பூப்பந்து தரவரிசையில் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டது
June 10, 2026, 8:29 am
உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை மெக்சிகோ அழுத்தத்துடன் எதிர்கொள்கிறது
June 9, 2026, 4:55 pm
உலகக்கோப்பையில் ‘பண பலம்’ காட்டும் பிரான்ஸ்: அர்ஜென்டினாவை மிஞ்சிய சந்தை மதிப்பு
June 9, 2026, 8:39 am
மெஸ்ஸி, ரொனால்டோவின் கடைசி உலகக் கிண்ணம்
June 8, 2026, 8:47 am
