செய்திகள் மலேசியா
ஹம்ஸாவின் நுழைவு குறித்து விவாதிக்க அடுத்த வாரம் தேசியக் கூட்டணி கூடுகிறது
கோலாலம்பூர்:
எதிர்க்கட்சி கூட்டணியின் எதிர்காலம், அதன் நிலைத்தன்மை குறித்து விவாதிப்பதற்காக, தேசியக் கூட்டணி அடுத்த வாரம் ஒரு முக்கியக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
கூட்டணிக்குள், குறிப்பாக பாஸ், பெர்சத்து கட்சிகளுக்கு இடையிலான உறவு சம்பந்தமாக, அதிகரித்து வரும் அரசியல் அமைதியின்மையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசியக் கூட்டணியில் கட்சியின் நிலை குறித்து கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரல் அமையும் என்று பெர்சத்துவின் உயர்மட்டத் தலைமைக்குள் இருப்பவர்கள் கூறியுள்ளனர்.
வரவிருக்கும் இந்தக் கூட்டத்தில் தேசியக் கூட்டணியில் பெர்சத்துவின் நிலை குறித்து அவர்கள் விவாதிக்க விரும்புகிறார்கள்.
இந்நிலையில் ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதுடன், பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுடின் கூட்டணியில் மீண்டும் இணைவதற்கான முன்மொழிவு குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 4:17 pm
ஜொகூர் மாநிலத் தேர்தலில் வவாசான் கட்சி போட்டியிடாது: ஹம்சா
June 25, 2026, 2:45 pm
சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசிய டாக்சிக்கு $15 கட்டணம் உயர்த்தப்படுகிறது
June 25, 2026, 2:10 pm
