நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரெங்கிட் தொகுதியில் தன் மகன் வேட்பாளராக நியமிக்கப்படாததால் புவாட் அம்னோவிலிருந்து விலகினார்: அஷ்ராப்

கோலாலம்பூர்:

ரெங்கிட் தொகுதியில் தன் மகன் வேட்பாளராக நியமிக்கப்படாததால் புவாட் ஷர்காசி அம்னோவிலிருந்து விலகினார்.

அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ராப் வஜ்டி டுசுகி இதனை கூறினார்.

அம்னோ உச்சமன்ற உறுப்பினரான புவாட் ஷர்காசி அம்னோவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 1ஆம் தேதி சட்டமன்றத்தை கலைக்க உத்தரவிடும் வரை ஜொகூர் அம்னோவை அரண்மனை கட்டுப்படுத்தியதாக கூறி அவர், கட்சியை விட்டு விலகியதற்கான முக்கிய காரணமாக புவாட் கூறியுள்ளார்.

இதுவொரு அவதூறான கூற்றாகும். இதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே வேளையில் வரும் ஜூலை 11ஆம் தேதி நடக்கு ஜொகூர் மாநிலத் தேர்தலில், ரெங்கிட் சட்டமன்றத் தொகுதிக்கு தனது மகன் வேட்பாளராக நிறுத்தப்படாததால் புவாட் ஷர்காஷி அம்னோவிலிருந்து விலகிவிட்டார். இது தான் உண்மை சம்பவம்.

மேலும் அம்னோவின் உயர்மட்டத் தலைமை தனது மகனை ரெங்கிட் தொகுதி வேட்பாளராக நிறுத்த வில்லை என்றால், கட்சியை விட்டு விலகுவதாகவும், கட்சியைத் தாக்குவதாகவும் மிரட்டி அவரே எனக்கு நீண்ட கடிதம் எழுதியிருந்தார்.

ஆக தவறான தகவல்களை பரப்புவதை புவாட் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அஷ்ராப் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset