நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்த ஆண்டு MYFutureJobs தளத்தின் மூலம் 13,309 பேர் வெற்றிகரமாக மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்: கெசுமா

புத்ராஜெயா:

இந்த ஆண்டு MYFutureJobs தளத்தின் மூலம்  கிட்டத்தட்ட 13,309 பேர் வெற்றிகரமாக மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

மனிதவள அமைச்சு (கெசுமா) இதனை கூறினார்.

அரசாங்கத்தின் தொழிலாளர் சந்தை தலையீடுகளின் விளைவாக, கிட்டத்தட்ட 31 சதவீதம் அதாவது 13,309 பேர், வெற்றிகரமாக மீண்டும் வேலையை பெற்றுள்ளனர்.

வேலை இழப்புப் பிரச்சினையைக் கண்காணித்து நிர்வகிப்பதில் மட்டும் அரசாங்கத்தின் முன்னுரிமை கவனம் செலுத்தவில்லை.

மாறாக பல்வேறு விரிவான, பயனுள்ள தொழிலாளர் சந்தை தலையீடுகள் மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் வேலை பெறுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த எண்ணிக்கை ஜூன் 12 வரையிலான சொக்சோ புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது.

இந்த எண்ணிக்கை, MYFutureJobs இணையதளம் மூலம் வெற்றிகரமாக வழங்கப்பட்ட 62,644 வேலைவாய்ப்புகளில் ஒரு பகுதியாகும்.

இது, செயல்படுத்தப்பட்ட வேலைப் பொருத்த முயற்சிகளின் செயல்திறனைப் பிரதிபலிக்கிறது.

வேலை இழப்புகளைப் பதிவு செய்வதோடு நின்றுவிடாமல், மக்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதற்கு உதவுவதே கெசுமாவின் நோக்கமாகும்.

வெற்றிகரமாக மீண்டும் வேலை வாய்ப்பு பெற்றவர்களில் பெரும்பாலானோர் சேவைத் துறையிலும், அதனைத் தொடர்ந்து உற்பத்தி, கட்டுமானத் துறைகளிலும் வேலைகளைப் பெற்றுள்ளனர்.

இது, நாட்டின் முக்கியப் பொருளாதாரத் துறைகளில் தொழிலாளர்களுக்கான தொடர்ச்சியான வலுவான தேவையைப் பிரதிபலிக்கிறது என்று கெசுமா தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset