செய்திகள் மலேசியா
ரசாயன அறிக்கைக்காகக் காத்திருக்கும் நிலையில், விசாரணைக் கைதியின் கதி குறித்து குடும்பத்தினர் கவலை
பாங்கி:
போதைப்பொருள் வழக்கு தொடர்பான ரசாயன அறிக்கைக்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதால், 28 வயதான விசாரணைக் கைதி ஒருவர் உயிர் பிழைப்பாரா என்பது சந்தேகமே என அவரது குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.
எனது சகோதரர் பைசால் அப்துல்லாவின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
உதவியின்றி நடக்கவோ, உட்காரவோ, சாப்பிடவோ அல்லது கழிப்பறையைப் பயன்படுத்தவோ அவரால் முடியவில்லை என்று 30 வயதான சகோதரி ரபேயா கூறினார்.
இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகுமானால், என் சகோதரனை மீண்டும் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்று நான் கவலைப்படுகிறேன்.
அவரது நிலைமை மோசமாகிக்கொண்டே இருக்கிறது என்று அவர் கூறினார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி பாங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் மூன்று போதைப்பொருள் குற்றங்களுக்காக பைசால் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றப்பத்திரிகையில், ஜனவரி 30 அன்று இரவு சுமார் 9 மணியளவில், செமினி காம்போங் சிரேவில் உள்ள ஒரு வீட்டின் அருகே அவர் 152.3 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் அருகிலுள்ள ஒரு வீட்டில் 25.1 கிராம் கஞ்சாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததற்காக ஒரு கூட்டுக் குற்றச்சாட்டும், 9.7 கிராம் மெத்தம்பெட்டமைனை வைத்திருந்ததற்காக ஒரு தனிப்பட்ட குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்கு முன்பு பைசால் ஏழு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாக ரபேயா கூறினார்.
அவருடன் கைது செய்யப்பட்ட மற்றொரு சந்தேக நபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது,
ஆனால் இரசாயன அறிக்கை நிலுவையில் உள்ளதால் பைசால் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்த முதல் மாதத்தில் தனது சகோதரர் ஆரோக்கியமாகத் தோன்றியதாகவும், ஆனால் பின்னர் அவர் பலமுறை கீழே விழுந்ததாகத் தனது குடும்பத்தினரிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 4:17 pm
ஜொகூர் மாநிலத் தேர்தலில் வவாசான் கட்சி போட்டியிடாது: ஹம்சா
June 25, 2026, 2:45 pm
சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசிய டாக்சிக்கு $15 கட்டணம் உயர்த்தப்படுகிறது
June 25, 2026, 2:10 pm
