நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் முத்ரா விளக்கக் கூட்டம்; இந்திய தொழில் முனைவோருக்கு நிதி, கடனுதவி தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும்: கேசவன்

ஈப்போ:

இந்திய தொழில் முனைவோருக்கு நிதி, கடனுதவி தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் முத்ரா விளக்கக் கூட்டம் ஈப்போவில் நடைபெறுகிறது.

பேரா இந்திய வர்த்தக தொழிலியல் சபையின் தலைவர் கேசவன் முனுசாமி இதனை கூறினார்.


பேரா இந்திய வர்த்தக சபை, மைக்கி  இணைந்து நடத்தும் முத்ரா விளக்கக் கூட்டம் வரும் ஜூன் 21ஆம் தேதி ஈப்போவில் உள்ள டவர் ரீஜென்சி ஹோட்டலில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சி தொழில் முனைவோர், சிறு, நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்கள், புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர், தொழில் வளர்ச்சியில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழிலுக்கான நிதி வசதிகள், வங்கிக் கடன்கள், அரசாங்க உதவித் திட்டங்கள் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த தகவல்களை ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பை இந்நிகழ்ச்சி வழங்குகிறது.

இந்நிகழ்வில் Tekun Nasional, SME Bank, Bank Rakyat, Amanah Ikhtiar Malaysia (AIM) மற்றும் Suruhanjaya Koperasi Malaysia (SKM) உள்ளிட்ட முக்கிய நிதி, தொழில் மேம்பாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

நிகழ்ச்சியின் போது வங்கி மற்றும் நிதி உதவிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், தொழில் வளர்ச்சிக்கான அரசாங்க ஆதரவுத் திட்டங்கள், தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில் விரிவாக்கம் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் மனிதவள, சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள், தேசிய ஒருங்கிணைப்புத் துறையின் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

தொழில் முனைவோரும் இளைஞர்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு 014-924 2558, 05-255 5558 அல்லது 016-255 8558 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset