செய்திகள் மலேசியா
மலாயா பல்கலைக்கழக சிந்தனை திருவிழாவில் கல்வி, வேளாண் நிலைத்தன்மையில் புதுமைகளைப் புகுத்திய மூன்று ஆராய்ச்சியாளர்கள் பாராட்டப்பட்டனர்
கோலாலம்பூர்:
மலாயா பல்கலைக்கழக சிந்தனை திருவிழாவில் கல்வி, வேளாண் நிலைத்தன்மையில் புதுமைகளைப் புகுத்திய மூன்று ஆராய்ச்சியாளர்கள் பாராட்டப்பட்டனர்.
கல்வித் துறையிலும், வேளாண் துறையின் நிலைத்தன்மையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதுமைகளை உருவாக்கியதற்காக, மூன்று உள்ளூர் ஆராய்ச்சியாளர்கள் அனைத்துலக பல்துறை ஆராய்ச்சி மாநாட்டின் விருது வழங்கும் விழாவில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றனர்.
இந்நிலையில் இவர்கள் மலாயா பல்கலைக்கழகத்தில் துங்கு வேந்தர் அரங்கில் நிறைவடைந்த, மலாயா பல்கலைக்கழகத்தின் சிந்தனைகள் திருவிழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
வான் ஷாமிமி வான் கமாருல் ஜமான், விலாசினி ஆனந்தராஜ், சியோங் வெய் போங் ஆகியோரே கௌரவிக்கப்பட்ட அந்த மூன்று ஆராய்ச்சியாளர்கள் ஆவர்.
இன்றைய தொழில், சமூக யதார்த்தங்களின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஆய்வுகளை நடைமுறைத் தீர்வுகளாக மாற்றுவதில் நாட்டின் அறிவுசார் மேதைகளின் திறனை இந்த வெற்றி நிரூபிக்கிறது.
கடந்த திங்கட்கிழமை தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழா, 'உத்வேகம் தரும் சிந்தனைகள், மாற்றத்தைத் தூண்டுதல்' என்ற கருப்பொருளைப் புதிய ஆற்றல்மிக்க ஒரு கருத்தாக்கத்துடன் கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 4:17 pm
ஜொகூர் மாநிலத் தேர்தலில் வவாசான் கட்சி போட்டியிடாது: ஹம்சா
June 25, 2026, 2:45 pm
சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசிய டாக்சிக்கு $15 கட்டணம் உயர்த்தப்படுகிறது
June 25, 2026, 2:10 pm
