செய்திகள் தமிழ் தொடர்புகள்
திரைமொழியில் தனிமொழி பேசிய இயக்குநருக்கு புகழஞ்சலி
தேனி:
பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி மாவட்டம் காட்ரோடில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவரது உடல் அரசு மரியாதையுடன் பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இவரது சொந்த ஊர் தேனி அல்லிநகரம் ஆகும். எந்த பின்னணியும் இல்லாமல் கிராமத்தில் இருந்து சினிமாவில் உச்சம் தொட்டவர் இவர். மண்மணம் வீசும் திரைப்படங்களை அதிகம் எடுத்ததுடன் தேனி மாவட்டத்துக்கு அடிக்கடி வந்து பொதுமக்களுடன் இயல்பாக பழகுவார். இதனால் சொந்த ஊர் மக்கள் இவர் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தனர்.
அலங்கரிக்கப்பட்ட மேடையில் அவரது உடல் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான ரசிகர்களும், பிரமுகர்களும், உள்ளூர் மக்களும் அதிகளவில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் வடிவேலு உட்பட பிரபலங்கள் அங்கு செலுத்தி வருகின்றார்கள்.
கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்திய பாரதிராஜாவின் படைப்புகள் தமிழ் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்துள்ளன. அவரின் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.
‘இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது' என்று இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாரதிராஜாவின் உடலுக்கு இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2026, 12:25 pm
தெரு நாய் பிரச்சினையால் திண்டாடும் சென்னை மாநகரம்
July 26, 2026, 6:44 pm
தமிழக-கர்நாடக எல்லையில் பதற்றம்: ஓசூர் எல்லையில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தம்
July 25, 2026, 2:57 pm
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்
July 25, 2026, 2:53 pm
“என்னிடமிருந்து மைக்கை பறிப்பதுதான் ஜனநாயகமா?” - நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்
July 23, 2026, 7:33 am
இந்திய அஞ்சல் துறை பெயரில் நூதன சைபர் மோசடி: பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை
July 21, 2026, 4:59 pm
உயிரி-எரிவாயு ஆலையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்
July 20, 2026, 3:08 pm
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ கைது
July 19, 2026, 6:30 pm
