செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழக-கர்நாடக எல்லையில் பதற்றம்: ஓசூர் எல்லையில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தம்
ஓசூர்:
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் உடனடியாக அணை கட்ட கர்நாடக அரசை வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தை கண்டித்தும் கன்னட ஜாக்கிருதி வேதிகே என்கிற அமைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் சாலை மறியல் போராட்டத்துக்குகு அழைப்பு விடுத்துள்ளது.
இதன் காரணமாகத் தமிழக-கர்நாடக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் போராட்டம் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி காவல் துறை மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தருமபுரி மண்டல அறிவுறுத்தலின்படி, இன்று அதிகாலை 4 மணி முதல் பெங்களூரு செல்லும் அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளும் ஓசூர் எல்லையோடு நிறுத்தப்பட்டுள்ளன.
மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம் அறிவித்துள்ளதால் தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
மறுஉத்தரவு வரும் வரையிலும், போராட்டம் முடியும் வரையிலும் தமிழகப் பேருந்துகள் கர்நாடகாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி, அத்திப்பள்ளி பகுதிகளில் இரு மாநில போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
