செய்திகள் தமிழ் தொடர்புகள்
தெரு நாய் பிரச்சினையால் திண்டாடும் சென்னை மாநகரம்
சென்னை:
சென்னையின் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்றான தெரு நாய்கள் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமாா் 33,000-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சாலைகளில் திரிவதாகக் கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் கால்நடைப் பராமரிப்புப் பிரிவு தெரு நாய்கள் தொடா்பான கணக்கெடுப்பை கடந்த 2021-இல் தொடங்கி 2024-ஆம் ஆண்டு நிறைவு செய்தது. அதன்படி, சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பது தெரிய வந்தது.
தடுப்பூசி, கருத்தடைத் திட்டம்: தெருநாய்கள் கடிப்பதால், ஆண்டுக்கு சுமாா் 2,000 போ் வரை சிகிச்சைக்கு வருவது கண்டறியப்பட்டதால், கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டமும், அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருத்தடை சிகிச்சைத் திட்டமும் செயல்படுத்தப்பட்டன. இதையடுத்து சென்னையில் 5 மண்டலங்களில் தெருநாய் கருத்தடை சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன.
![]()
கடந்த 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரை சென்னையில் 88,087 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, 71,108 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதே காலக்கட்டத்தில் 88,086 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெருநாய்கள் உள்ளன. தற்போது வரை 1.47 லட்சம் நாய்களுக்கே மைக்ரோ சிப் பொருத்தி மாநகராட்சியினா் கண்காணித்து வருகின்றனா். ஆனால் சுமாா் 33,000-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கண்காணிப்பு, கருத்தடை சிகிச்சை இன்றி சாலைகளில் திரிகின்றன. இதன்மூலம் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம் பயனளிக்காமல் போவதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
