செய்திகள் தமிழ் தொடர்புகள்
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ கைது
சென்னை:
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்று (ஜூலை 20) காலை கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.கருணாநிதி வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதைத் தொடர்ந்து நேற்றிரவு அவர் மீது புகார் அளிக்க தவெகவினர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு திரண்டு மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் புகார் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் இன்று காலை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ வீட்டுக்கு வந்தனர். அதற்குள் தகவல் அறிந்து எம்எல்ஏ வீட்டு முன்பு திரளான திமுகவினர் திரண்டனர்.
அவரை கைது செய்து வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தபோது, போலீசார்ரை கண்டித்து திமுகவினர் வாகனத்தை மறித்து அமர்ந்து கோஷமிட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு நிலவியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 7, 2026, 10:06 pm
இனிமேல் பெண்களப் பற்றி அசிங்கமாகப் பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்: பேரவையில் முதல்வர் விஜய் எச்சரிக்கை
September 5, 2026, 10:07 pm
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை நிலையம்
September 3, 2026, 3:14 pm
சென்னை விமான நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் மதிப்புடைய 3.45 கிலோ கஞ்சா கடத்த முயற்சி: மலேசிய ஆடவர் கைது
September 3, 2026, 2:07 pm
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
September 2, 2026, 2:55 pm
மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாள்களாக உயா்த்தியது தமிழக அரசு
August 30, 2026, 9:40 pm
