செய்திகள் தமிழ் தொடர்புகள்
“என்னிடமிருந்து மைக்கை பறிப்பதுதான் ஜனநாயகமா?” - நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்
சென்னை:
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்த போது மைக்கை பறிப்பதுதான் ஜனநாயகமா? என்று நடிகை சனம் ஷெட்டி கேள்வி எழுப்பி உள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நடிகை சனம் ஷெட்டி கலந்து கொண்டு பேசினார்.
“இது மாணவர்களுக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டம். பொது மக்களில் ஒருவராக இதில் நான் பங்கேற்கிறேன். இது மாணவர்களின் போராட்டம். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.
இந்த மேடையை அரசியல் சார்ந்து பயன்படுத்துபவர்கள் தான் கோமாளிகள். நாம் கிடையாது. நான் தளபதியின் (விஜய்) தீவிர ரசிகர். நேற்றுதான் முதல் நாள் முதல் காட்சி பார்த்திருந்தேன். அப்போது அவரது பேச்சுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குரல் எழுப்பினர். இருப்பினும் தொடர்ந்து சனம் ஷெட்டி பேசினார்.
இது ஜனநாயகம் அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. இப்போது புரிகிறதா நான் யார் குறித்து பேசினேன் என்று. மாணவர்களுக்காக நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க நான் வந்துள்ளேன். யாரும் சொல்லி இங்கு நான் வரவில்லை. நானாகவே வந்துள்ளேன்” என்று ஆவேசமாக நடிகை சனம் ஷெட்டி பேசினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
