நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

உயிரி-எரிவாயு ஆலையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்

சென்னை:

சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் உயிரி-எரிவாயு ஆலையைத் முதல்வர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் பொது-தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் உயிரி-எரிவாயு ஆலையைத் முதல்வர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னையில் நாள்தோறும் சேரும் குப்பைகளில் 3,200 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகளாகவும், 2,950 மெட்ரிக் டன் மக்காத குப்பைகளாகவும் உள்ளன. இதில் மக்கும் குப்பைகளை நவீன தொழில்நுட்பத்தில் இயற்கை எரிவாயுவாகவும், உரமாகவும் மாற்ற வேண்டும்.

பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளைத் தார்ச்சாலை அமைக்கவும், சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாகவும் அனுப்ப வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார்.

சேத்துப்பட்டு ஆலை தினசரி 140 மெட்ரிக் டன் ஈரக்கழிவுகளைச் செயலாக்கி, 4,900 கிலோ எரிவாயுவை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset