செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்திய அஞ்சல் துறை பெயரில் நூதன சைபர் மோசடி: பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை
சென்னை:
இந்திய அஞ்சல் துறை பெயரில் புதிய வகை நூதனமான சைபர் மோசடி அரங்கேறி வருவதாக பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ-யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சைபர் குற்றவாளிகள் பொதுமக்களின் செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் (குறுஞ்செய்தி) அல்லது வாட்ஸ் அப் மூலம் ஒரு குறுஞ்செய்தியை அனுப்புகிறார்கள். அதில், “உங்களுடைய பார்சல் முகவரி சரியாக இல்லாததால் டெலிவரி செய்ய முடியவில்லை. அதை மீண்டும் டெலிவரி செய்ய சிறிய தொகையை ஆன்லைனில் செலுத்தவும்” என்று ஒரு லிங்க்உடன் செய்தி வரும்.
அதை கிளிக் செய்தால், அது அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் போன்றே அச்சு அசலாக வடிவமைக்கப்பட்ட ஒரு போலி இணையதளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். அங்கே நீங்கள் உங்கள் வங்கி விவரங்கள் அல்லது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை உள்ளிடும்போது, அந்தத் தகவல்களைத் திருடும் மோசடி கும்பல், உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் சில நிமிடங்களில் சுருட்டிவிடும் அபாயம் உள்ளது.
எனவே, இந்த மோசடியில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், முன்பின் தெரியாத எண்களில் இருந்து வரும் எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் பார்சல் குறித்த தகவல்களை அறிய www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உங்கள் வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் பின், ஓடிபி அல்லது கடவுச்சொற்களை யாருடனும் பகிரக்கூடாது.
ஏதேனும் சந்தேகத்துக்குரிய குறுஞ்செய்தி வந்தால், தாமதிக்காமல் உடனடியாக சைபர் குற்றப்பிரிவு உதவி எண் 1930 அல்லது இணையதள முகவரி http://www.cybercrime.gov.in -இல் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
