நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கை கூட்டணியில் பெர்சத்து இணைவது குறித்து எந்தப் பேச்சும் இல்லை: டத்தோஸ்ரீ அன்வார்

தோக்கியோ:

நம்பிக்கை கூட்டணியில் பெர்சத்து கட்சி இணைவது குறித்து எந்தப் பேச்சும் இல்லை.

பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.


பெர்சத்துவுடனான அரசியல் உறவை பாஸ் கட்சியினர் துண்டித்துக் கொண்டனர்.

இதனால்  பெர்சத்து கட்சி நம்பிக்கை கூட்டணியில் இணைவதற்கான சாத்தியக்கூறு குறித்து எந்தப் பேச்சையும் தாம் கேட்கவில்லை.


தற்போது தனது கட்சியால் பின்பற்றப்படும் அரசியல் அணுகுமுறை, கட்சிகளுக்கு இடையிலான உறவுகளைப் பாதிக்கக்கூடிய தந்திரங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல.

மாறாக பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார்.

இனிமேல் ஒன்றுமில்லை, பேச்சுவார்த்தைக்கே இடமில்லை.

ஜப்பானுக்கான தனது மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்யும் விதமாக இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset