செய்திகள் மலேசியா
சிகாம்புட் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கமம்: ஜூன் 14இல் பள்ளி வளாகத்தில் பொதுக்குழு கூட்டம்
கோலாலம்பூர்:
1954-ஆம் ஆண்டு முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்விப் பணியை ஆற்றி வரும் சிகாம்புட் தமிழ்ப்பள்ளியின் தொடர் மேம்பாட்டிற்காக முன்னாள் மாணவர்கள் ஒன்றிணையவிருக்கின்றனர்.
எதிர்வரும் ஜூன் 14-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு, பள்ளி வளாகத்தில் சிகாம்புட் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் மற்றும் சங்கம நிகழ்வு நடைபெறவுள்ளது.
பள்ளி முன்னாள் மாணவர்கள் மத்தியில் ஆழமான பிணைப்பை உருவாக்குதல், கால மாற்றத்திற்கு ஏற்ப கல்விச் சூழலை மேம்படுத்துதல், பள்ளி வளர்ச்சிக்குத் துணை நிற்றல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் செல்வமணி கூறுகையில், ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அறிவொளி பரப்பி வரும் நமது தாய் பள்ளியின் வளர்ச்சிக்கு, முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
இந்த சங்கமம் பழைய நினைவுகளைப் புதுப்பிப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத் தலைமுறையினருக்குச் சிறந்த கல்விச் சூழலை உருவாக்க வழிகோலும் என்று தெரிவித்தார்.
ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஐ.சந்திரசேகரன் கூறுகையில்,
இந்த இரண்டாம் கட்ட பொதுக்குழு கூட்டத்தில், பள்ளியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.
சிகாம்புட் தமிழ்ப்பள்ளியின் அனைத்து முன்னாள் மாணவர்களும் இந்த வரலாற்று தருணத்தில் பங்கேற்று, பள்ளி மேம்பாட்டிற்கு வலுசேர்க்க வேண்டும்," என அறைகூவல் விடுத்தார்.
இக்கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் முன்னாள் மாணவர்கள், ஜூன் 10-ஆம் தேதிக்குள் தங்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும். நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் பின்வரும் இணையதள முகவரி அல்லது கியூஆர் (QR) குறியீடு மூலம் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்: பதிவு செய்ய: https://forms.gle/nuV34G95i6zsETuFA
இந்த நிகழ்வு குறித்த மேலதிகத் தகவல்களுக்கு, ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஐ.சந்திரசேகரன் (016-2006221) அல்லது தலைவர் செல்வமணி (012-6688718) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 10, 2026, 10:18 pm
நம்பிக்கை கூட்டணியில் பெர்சத்து இணைவது குறித்து எந்தப் பேச்சும் இல்லை: டத்தோஸ்ரீ அன்வார்
June 10, 2026, 10:18 pm
பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை
June 10, 2026, 6:14 pm
திரைத்துறையின் மாபெரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்
June 10, 2026, 5:51 pm
