செய்திகள் மலேசியா
இந்திய சிறு, நடுத்தர வணிகர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மலேசிய வர்த்தக விருது 44 சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டது: ஜெய் சந்திரன்
சிரம்பான்:
இந்திய சிறு, நடுத்தர வணிகர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மலேசிய வர்த்தக விருது 44 சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
நெகிரி செம்பிலான் மலேசிய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜெய் சந்திரன் கோபால் இதனை கூறினார்.
நெகிரி செம்பிலான் மலேசிய வர்த்தகர்கள் சங்கம் தொடங்கப்பட்டது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக இந்திய வர்த்தகர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தான் மூன்று ஆண்டுகளுக்கு முன் எம்பிஏ மலேசிய வர்த்தகர்கள் விருது விழாவை சங்கம் தொடங்கியது.
இன்று மூன்றாவது விருது விழா சிரம்பானில் கோலாகலமாக நடைபெற்றது.
ஆசிய பசிபிக்கின் கௌரவ உதவித் தலைவர் டத்தோ படுக்கா ஸ்ரீ டாக்டர் ஹஸ்னிசால் இவ்விழாவிற்கு தலைமையேற்று விருதுகளை எடுத்து வழங்கினார்.
மொத்தம் 44 சாதனையாளர்களுக்கு இன்றைய விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.
இந்திய சிறு, நடுத்தர வணிகர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விருதுகள் வழங்கப்பட்டது.
அதே வேளையில் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களை அங்கீகரிக்கும் நோக்கிலும் இவ்விழா நடத்தப்பட்டது.
குறிப்பாக விருது பெற்றவர்களின் சாதனை கதைகள் அடங்கிய புத்தகமும் வெளியிடப்படும்.
இது அனைத்துலக ரீதியிலும் கொண்டு செல்லப்படும் என்று ஜெய் சந்திரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 10, 2026, 10:18 pm
நம்பிக்கை கூட்டணியில் பெர்சத்து இணைவது குறித்து எந்தப் பேச்சும் இல்லை: டத்தோஸ்ரீ அன்வார்
June 10, 2026, 10:18 pm
பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை
June 10, 2026, 10:16 pm
சிகாம்புட் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கமம்: ஜூன் 14இல் பள்ளி வளாகத்தில் பொதுக்குழு கூட்டம்
June 10, 2026, 6:14 pm
திரைத்துறையின் மாபெரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்
June 10, 2026, 5:51 pm
